தமிழ்நாட்டில் இன்று இந்த 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மத்திய வங்கக்கடல் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நாகை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் தென்காசி, விருதுநகர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் இன்று மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




