தமிழ்நாடு பாஜகவில் நடக்கும்போகும் மாற்றம்?
தமிழ்நாடு அரசியலில் பாஜக என்ற கட்சியை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சென்றவர்களில் எல்.முருகனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. நாமக்கல் மாவட்டத்தில் கோனூர் என்ற கிராமத்தில் கூலித் தொழிலாளியின் மகனாக பிறந்த எல்.முருகன், சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்ட கல்லூரியில் சட்டம் முடித்தவர், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றியிருக்கிறார்.
1997-ஆம் ஆண்டு கல்லூரி பருவத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மூலம் தனது அரசியல் பயணத்தை எல்.முருகன் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு பாஜக தலைவராகப் பொறுப்பேற்றார்.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து போட்டியிட்ட பாஜக, நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்று ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைந்தது. இதன் மூலம் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாஜகவுக்கு மீண்டும் பிரதிநிதித்துவம் கிடைத்தது. 2021 தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் தோல்வியடைந்த போதும், அதே ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தார்.
இந்த சூழலில் தான் மத்திய இணையமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக பிரதமர் மோடிக்கு எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் எதிர்வரும் 2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபட விரும்புவதாகவும், அதனால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்துள்ளார். முதலில் தேசம், அடுத்து கட்சி, இறுதியாகவே தாம் என கூறியுள்ள எல்.முருகன், மத்திய பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக அனுமதிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி, ‘வீ த லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்நிலையில், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அண்ணாமலை நேற்று அறிவித்தார். இந்த சூழலில் தான் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் வகையில் மாநில அரசியலுக்கு திரும்புவதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




