டோரதி பட க்ளைமாக்ஸில் முத்த காட்சி வைத்தது ஏன்?
டோரதி பட க்ளைமாக்ஸில் முத்த காட்சி வைத்தது ஏன்..? என்பது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் விளக்கம் அளித்துள்ளார்.க்ளைமாக்ஸில் முத்த காட்சி வைத்தது ஏன்? என்பது குறித்து பேசிய அவர், “அது முத்தம் தானே.. முத்தம் தாண்டி அன்பை வேறு என்ன சிறப்பாக வெளிப்படுத்தி விட முடியும்?. கார்த்தி கதாபாத்திரம் பார்த்த அளவுக்கு நம்மால் சுப்பு கதாபாத்திரத்தை முழுமையான திருநங்கை பெண்ணாக பார்க்க முடியவில்லை.
காரணம், சுப்புவை ஆணாகவே பார்ப்பதால் ஏற்பட்ட சிக்கல் தான் இது. படக்குழுவிலே சிலர் இதை கூறினார்கள். திருநங்கையை கருணையுடன் அணுகுவது உங்களுக்கு ஓகேவாக இருக்கிறது. அதே சமயம் அவர்களை காதலுடன் ஒருவர் அணுகுவதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், அது உங்கள் பிரச்சினை தான்.” என்றார்.
பாலினப் பாகுபாடு, சமூக ஒடுக்குமுறை மற்றும் ஆணாதிக்க மனப்பான்மையின் தாக்கத்தை டோரதி படம் அழுத்தமாகப் பேசியிருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார் .
📱 Share on WhatsApp 𝕏 Share on X





