--- --:--:-- --

வங்கி ஊழியர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறையா?

3

வங்கி ஊழியர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை எனப் பரவும் தகவல் வதந்தி என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. வாரத்தில் 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தேசிய வங்கிகளின் அலுவலர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் 3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்த 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

 

இதற்கிடையே வங்கி ஊழியர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவித்து நிதி அமைச்சகத்தின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், வங்கி ஊழியர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை எனப் பரவும் தகவல் வதந்தி என்றும் நிதி அமைச்சகத்தின் உத்தரவு எனப் பரவும் புகைப்படத்தை நம்ப வேண்டாம் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

 

 

இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் (MIB) இயங்கும் PIB உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு (PIB Fact Check) சமூக வலைதளப்பதிவில், “சமூக ஊடகங்களில் பரவி வரும், நிதி அமைச்சகத்தின் (நிதிச் சேவைகள் துறை) பெயரில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ஓர் அறிவிப்பு, எஸ்பிஐ (SBI) உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பொது விடுமுறை” என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

 

அனைத்து சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை என வெளியான தகவல் வதந்தி என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் விளக்கமளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon