--- --:--:-- --

தடுப்பூசி ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட மாணவர்! ஆபத்தான நிலையில் சிகிச்சை

3

பண்ருட்டி அருகே தடுப்பூசி ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடலூர் மாவட்டம் அங்குசெட்டிபாளையத்தை சேர்ந்த சத்யகுமார் என்பவரது மகன் பவன்சங்கர்.

 

தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு கடந்த இருபத்தி எட்டாம் தேதி பள்ளியில் தொண்டை வீங்கிக்கான தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. ஆனால் ஒவ்வாமை காரணமாக அடுத்த சில நிமிடங்களில் அந்த மாணவன் மயங்கி விழுந்துள்ளார்.

 

அவனுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் உடல்நிலை தேராததால் தற்பொழுது பெங்களூரு அருகே உள்ள நிமான்ஸ் மூளை நரம்பு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்த அவரின் பெற்றோர் மகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரி மனு அளித்தனர். மேலும் தங்கள் மகனுக்கு தடுப்பூசி போடுவது பற்றி பள்ளி நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon