--- --:--:-- --

பீச் டூ தாம்பரம் புறநகர் ரயில்கள் ரத்து!

10

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான பல புறநகர் மின்சார ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகத் தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

 

 

கிண்டி நிலையத்தில் இந்த பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் அக்டோபர் 4 வரை தினமும் நள்ளிரவு 12.15 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரத்து செய்யப்படும் ரயில் சேவைகளின் விவரம் : சென்னை கடற்கரை – தாம்பரம் (இரவு 11.59 மணி): சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சனிக்கிழமை (செப். 26) முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம் – சென்னை கடற்கரை (இரவு 8.45 மணி): தாம்பரத்திலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், செப்டம்பர் 26, 28, 29, 30 மற்றும் அக்டோபர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

 

 

தாம்பரம் – சென்னை கடற்கரை (இரவு 11.40 மணி): தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரத்து செய்யப்படுகிறது. இரவு நேரங்களில் பயணிக்கும் பயணிகள் இம்மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon