எஃப்.க்யூ.எல் நிதி மோசடி: 17 பேர் கைது, தனிப்படை அமைப்பு: அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எஃப்.க்யூ.எல் (FQL) நிதி மோசடி குறித்து விளக்கமளித்துப் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், இந்த மோசடி தொடர்பாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சுமார் ரூ.200 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
மேலும், பெறப்பட்ட புகார்கள் அனைத்தும் உரிய விசாரணைக்காக பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளிகளைப் பிடிக்க மேலூர் டி.எஸ்.பி தலைமையில் 10 காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பேரவையில் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




