--- --:--:-- --

பஞ்சமி நிலங்களைக் கண்டறிய புதிய ஆணையம்: – பேரவையில் வன்னி அரசு அறிவிப்பு

9

மிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 7) பஞ்சமி நிலங்களை மீட்பது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ மாரிமுத்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, த.வெ.க தலைமையிலான கூட்டணி ஆட்சியில் முதலமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து மீட்பதற்காகத் தனியாக ஓர் ஆணையம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

 

 

மேலும், சாதி மறுப்புத் திருமணங்களும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு ஒரு காரணமாக அமைகின்றன என்பதை முதலமைச்சர் தனது உரையில் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியதை மிக முக்கியமான கருத்தாகக் குறிப்பிட்ட அமைச்சர், சமூகப் பிரச்சினையைச் சட்டம் ஒழுங்குடன் தொடர்புபடுத்திப் பேசிய முதலமைச்சருக்குத் தனது நன்றியையும் பேரவையில் தெரிவித்துக் கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon