இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பழனி திருக்கோவில் நவீனமயமாகும்: பேரவையில் அமைச்சர் ரமேஷ்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் ரமேஷ், புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
கோவிலில் உள்ள அன்னதான கூடம் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நவீனப்படுத்தி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ‘மாடர்ன் திருக்கோவிலாக’ பழனி கோவில் மாற்றப்படும் என்றும், இந்த மேம்பாட்டுப் பணிகள் ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும் என்றும் பேரவையில் அமைச்சர் உறுதியளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




