--- --:--:-- --

சென்னை ராணுவ அகாடமியில் இளம் அதிகாரிகளின் தீரச்செயல் நிகழ்ச்சி..!

8

சென்னையிலுள்ள இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நாளை தங்களது பயிற்சியை நிறைவு செய்யவுள்ள அதிகாரிகள் இன்று தங்களது தீரச்செயல் திறன்களை செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் பயிற்சி அகாடெமியின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

 

 

இளம் ராணுவ அதிகாரிகள், தங்கள் உடல் தகுதித் திறன்கள், ராணுவ தற்காப்புக் கலை, குதிரையேற்ற சாகசங்கள், களரிப்பயிற்று, பதுங்கு குழி தகர்ப்புப் பயிற்சி ஆகியவற்றை இந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினர். உடல் தகுதி மற்றும் வலிமைக்கு சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு உடற்பயிற்சிகளுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, ஆயுதங்கள் ஏதுமின்றி எதிரியை எதிர்கொள்ளும் ராணுவ தற்காப்புக் கலை நிகழ்ச்சி இதில் இடம்பெற்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon