நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் எதற்கு? – சீமான் அறிக்கை
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து இன்று வரை தவெக அரசு, அரசமைப்புச் சட்டத்தின் 110-வது விதியின் கீழ் அறிவித்துள்ள திட்டங்களின் மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.73,900 கோடி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதற்கு மேலாக, எரிவாயு உருளை, இலவச பேருந்து, பால் கொள்முதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆண்டுதோறும் தொடர் செலவாக ரூ.10,720 கோடி வரை தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் திட்டங்களின் வரவு செலவு விவரங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏன் என்றும், அனைத்து திட்டங்களும் 110-வது விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு, அதன் மீதான விவாதங்கள் எதற்கு என்றும் சீமான் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




