தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை அறிவிப்பு..!
தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை (27.08.2026) காலை 09:00 மணி முதல் மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம்: மல்லாங்கிணறு துணை மின்நிலையம்: மல்லாங்கிணறு, வலையன்குளம், அழகியநல்லூர், கப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள். விருதுநகர் இன்டோர் துணை மின்நிலையம்: பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள். ராஜபாளையம் துணை மின்நிலையம்: அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை பகுதி, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
கோயம்புத்தூர் மாவட்டம்: ஆங்கலக்குறிச்சி துணை மின்நிலையம்: ஆங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், பரமடையூர், பி.என்.நூர், எம்.ஜி.நூர், சோமந்துரைச்சித்தூர், என்.எம்.சுங்கம், ஆழியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பளபட்டி, சிலோன் காலனி. இரும்பறை துணை மின்நிலையம்: இரும்பறை, பெத்திக்குட்டை, சாம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வயாளிபாளையம், இலுப்பநத்தம், அனதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர்.
மயிலாடுதுறை மாவட்டம்: பொறையார் துணை மின்நிலையம்: பொறையார் டவுன், தில்லையாடி, சாத்தனூர், தரங்கம்பாடி, குடிநீர் திட்டப் பகுதிகள் (CWSS I, II), சங்கரன்பந்தல், திருக்கடையூர். கிடாரங்கொண்டான் துணை மின்நிலையம்: செம்பனார்கோவில், எம்.ஆர்.எம், பூம்புகார், மாணிக்ககிராமம், ஆக்கூர், திருவாலி.
அரியலூர் மாவட்டம்: ஆண்டிமடம் துணை மின்நிலையம்: வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல். பெரியகருக்கை துணை மின்நிலையம்: பெரியகருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவல்லம். அய்யூர் துணை மின்நிலையம்: கங்குழி, குளத்தூர், பூக்குழி, வல்லம், அய்யூர். பாப்பாகுடி துணை மின்நிலையம்: இரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலநிகுழி, பவர்கிரிட் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




