பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனிதநேய அடிப்படையில் வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகளை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாகத் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




