3 மாத கனிம போக்குவரத்து தடை வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்ட 3 மாதத் தடையை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உட்கட்டமைப்புத் தேவைகளுக்காக கடந்த ஜூலை 9-ல் விதிகள் திருத்தப்பட்டு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




