செங்கோட்டையன் இலாகா முக்கிய அதிகாரி மாற்றம்..!
தமிழகத்தில் புதிய ஆட்சி அமையும்போது அதிகாரிகள் இடமாற்றம் என்பது வழக்கமான ஒன்றாக இருக்கும் நிலையில், தற்போது 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆட்சி அமைந்து 3 மாதங்கள் நிறைவடைந்நதுள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி இந்த அரசின் முதல் பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. இதில் முதல் நாளில் நிதியமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், 2-வது நாள், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் வினோத் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து 3-வது நாளான நேற்று மானிய கோரிக்கை விவாதம் நடந்தது.
சட்டசபையில் நேற்று காரசாரமான விவாதங்கள் அதிகமாக நடந்த நிலையில், இரவு தமிழக அரசின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பிரகாஷ் ஐஏஎஸ், ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதே சமயம், ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை ஆணையர் மலர்விழி ஐஏஎஸ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர் அனுபவம் வாய்ந்தவராக இருக்கும் செங்கோட்டையன் தான் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக இருக்கிறார். அவரது துறையின் கூடுதல் ஆணையராக பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,
📱 Share on WhatsApp 𝕏 Share on X




