போலீஸ் வாகனத்தை சூழ்ந்த தி.மு.க தொண்டர்கள்..!
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக, தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த கைதுக்கு எதிராக உதயநிதி வீட்டின் முன்பு ஏரளமான தி.மு.க-வினர் தர்ணாவில் ஈடுபட்டார்கள் சாலையில் அமர்ந்து போராடியவர்களை தற்போது போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட வாகனத்தை தி.மு.க. தொண்டர்கள் சூழ்ந்துள்ளார்கள். அப்போது ஜன்னல் வழியே கையசைத்தவாறு உதயநிதி சென்றார்.





