--- --:--:-- --

புதிய பொறுப்புகளை ஏற்கமாட்டோம் – அ.தி.மு.க மூத்த தலைவர்கள் கூட்டாக அறிவிப்பு

6

.தி.மு.க வில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக மாற்றங்கள் குறித்து மூத்த நிர்வாகிகள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் ஆர். விஸ்வநாதன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தனர்.

 

அப்போது அவர்கள், தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களை ஆராயாமல், பல்வேறு நிர்வாகிகளை பொறுப்புகளில் இருந்து நீக்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்று கண்டனம் தெரிவித்தனர்.

 

 

மேலும், ஏற்கெனவே வகித்து வந்த பதவிகளை மீண்டும் வழங்கும் வரை புதிய பொறுப்புகள் எதையும் ஏற்கமாட்டோம் என்று அறிவித்த அவர்கள், கட்சியில் எடுக்கப்படும் முடிவுகள் வெளிப்படைத்தன்மையுடனும், அனைவரின் கருத்துகளையும் மதிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்தக் கூட்டுப் பேட்டி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கட்சியின் உள்நிலை அரசியல் குறித்து புதிய விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon