மின்வாரியத்தில் ஒரே நேரத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு..!
மின்வாரியத்தில் ஒரே நேரத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கோரிக்கை நிலுவையில் இருந்தது. இந்நிலையில், உதவி பொறியாளர்களாக பணியாற்றி வந்தவர்களுக்கு உதவி செயல் பொறியாளர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மின்சார வாரிய ஊழியர்கள் 700 பேருக்கு பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2012-ம் ஆண்டு உதவி பொறியாளர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 700 உதவி பொறியாளர்களுக்கு. உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான கோப்பில் துறை அமைச்சர் நிர்மல் குமார் கையெழுத்திட்டார்.





