மு.க. அழகிரியின் மகள் கயல்விழி காவல் நிலையத்தில் ஆஜர்..!
சென்னை அடையாறில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ (SBI) வங்கி மேலாளரைத் தாக்கிய வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், அது தொடர்பான வழக்கில் சென்னை, சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் மு.க.அழகிரியின் மகள் நேரில் ஆஜராகி உள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரிக்க உள்ளனர்.






