ஏசி, வாஷிங்மெஷின் இல்லாத வீட்டுக்கு ரூ.14,000 மின் கட்டணம்
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் காந்தி நகரை சேர்ந்தவர் ஆசீர்வாதம். அதே பகுதியில் மளிகை கடை வைத்து உள்ளார். 2 அறைகள் கொண்ட இவரது வீட்டில் ஏ.சி., வாஷிங்மெஷின் எந்திரங்கள் இல்லை. வழக்கமாக ரூ.800 முதல் ரூ.850 வரை மின்கட்டணம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இந்த மாதம் அவருக்கு ரூ.14 ஆயிரத்து 234 மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மின்கட்டணம் உயர்வு குறித்து விளக்கம் கேட்பதற்காக அவர் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றபோதும் அங்கிருந்த ஊழியர்கள் முறையான பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது. எனவே தவறுதலாக ரூ.14 ஆயிரத்து 234 மின்கட்டணம் வந்ததா? அந்த கட்டணத்தை செலுத்த வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்று வியாபாரி ஆசீர்வாதம் புலம்பியபடி உள்ளார்.






