தர்மேந்திர பிரதான் பாவம், மோடியை விலக சொல்லுங்கள் – திருமாவளவன் கருத்து
நீட்டால் ஏற்படும் பாதிப்புகள் மாற வேண்டுமென்றால் அதை ரத்துசெய்ய வேண்டும். தர்மேந்திர பிரதான் பாவம். இதை தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை. தனிநபரை மட்டும் பதவி விலக சொல்வது நல்ல விளைவை தராது. இதற்கு அரசு பொறுப்பேற்று, மோடி பதவி விலக வேண்டும் என்று சொல்லுங்கள்.
அதுதான் சரி. இந்த சிஸ்டத்தில் அத்தனை ஓட்டை, உடைசல்கள் உள்ளன. கடைசி ஆளாக இருக்கும் பியூன் வரை மாற்றாமல் எதையும் மாற்ற முடியாது. ஒரு ஆளை மாற்றுவதால் பிரச்னைகள் தீராது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




