--- --:--:-- --

சென்னையில் பிரபல கல்லூரிகளில் வருமான வரித்துறை சோதனை

வருமான வரி

சென்னையில் உள்ள, பிரபல ஜேப்பியார் கல்வி குழும கல்லூரிகளில் வருமான வரி துறை சோதனை நடத்தினர்.

 

சென்னையில் ஜேப்பியார் கல்வி குழுமத்தின் சார்பில் பள்ளி கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. அவர்களது கல்வி குழுமத்தில், வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

அதன்படி, சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட மொத்தம் 25 இடங்களில் இச்சோதனை நடைபெறுவதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon