--- --:--:-- --

பாஜக மீது கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு..!

8

2029-ஆம் ஆண்டிலேயே தேர்தல் வந்துவிடும் என்றும், அதற்காக 5 ஆண்டுகள் முழுமையாக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற எண்ணத்தை திமுகவுக்கு பாஜக ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 

 

அரசியல் சூழல் மற்றும் தேசிய அரசியலில் நிலவி வரும் மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர், தேர்தல் காலம் குறித்து பல்வேறு ஊகங்கள் உருவாகும் வகையில் பாஜக அரசியல் சிக்னல்களை வழங்கி வருவதாக விமர்சித்தார்.

 

 

மேலும், இந்த அரசியல் அணுகுமுறை கூட்டணி கட்சிகளின் எதிர்பார்ப்புகளையும் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கார்த்தி சிதம்பரத்தின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon