--- --:--:-- --

பழனி நில மோசடி: சார் பதிவாளர், பத்திர எழுத்தர் வீடுகளில் சோதனை

6

ழனி கோயில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி புகாரில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஆகியோரது வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடி -க்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

இந்த வழக்கில் நிலத்தை விற்ற முருகதாஸ் சாமிகள், நிலத்தை வாங்கிய பழனி சேதுபதி, வெள்ளத்துரை ஆகிய மூவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இன்று காலை முதலே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஜஸ்டின் மணிகண்டனிடமும் அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அதேபோல, பத்திரப் பதிவில் சாட்சி கையொப்பமிட்ட அறக்கட்டளை நிர்வாகி சண்முக சுந்தரம் என்பவரது வீட்டிலும் சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்கின்றனர். ஜஸ்டின் மணிகண்டனின் நண்பரும் பத்திர எழுத்தருமான ஜெயப்பிரகாஷ் வீட்டிலும் போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon