நீட் தேர்வில் தோல்வியா? மாணவர்களின் பெற்றோர்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ்: “நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. வெற்றி பெற்ற மானவர்களுக்கு வாழ்த்துகள். தோல்வி அடைந்த மாணவர்கள் மனம் உடைந்துபோக வேண்டாம். நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
உங்களுக்காக அண்ணன் விஜயின் அரசு இருக்கிறது. தோல்வியில் இருந்து மாணவர்கள் மீண்டு வர வேண்டும். நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்கள் உறுதுணையாக அருகிலேயே இருக்க வேண்டும். 104 என்ற எண்ணுக்கு அழைத்து பேசுங்கள். அவர்களுக்கு ஆறுதலக இருங்கள்” என்று அறிவுரை கூறினார்.






