--- --:--:-- --

நெல் கொள்முதலை வேகப்படுத்த வேண்டும் : தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

3

கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாகக் கிடங்குகளுக்கு அப்புறப்படுத்தி, நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் போது நெல் மூட்டைகள் நனைந்து வீணானதால், காவிரி பாசன மாவட்ட உழவர்கள் சந்தித்த பெருத்த இழப்புகளில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் தவித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எனவே, மீண்டும் அதே போன்றதொரு பாதிப்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள அவர், அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon