இதுதான் உத்தமர் விஜய் ஆட்சியின் லட்சணம் – ரகுபதி குற்றச்சாட்டு
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசை விமர்சித்து முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பழனி கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலங்கள், வெறும் ரூ.2 கோடிக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதும், பின்னர் அது உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதுமே லஞ்சம் வாங்காத உத்தமர் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் விஜய் சாரின் ஆட்சியின் லட்சணத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர் சாடினார்.
மேலும், ஆளும் அரசின் பங்களிப்பு மற்றும் அதிகார வர்க்கத்தின் துணை இல்லாமல் இப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்ட நில முறைகேடு நடக்கவே வாய்ப்பில்லை என்றும், இந்தத் தவறுகளுக்கு தற்போதைய தவெக அரசே முழுப் பொறுப்பு என்றும் முன்னாள் அமைச்சர் ரகுபதி தனது பேட்டியில் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.






