கரூரில் ரூ.1,700 கோடி காலணி ஆலை: அடிக்கல் நாட்டும் முதல்வர் ஜோசப் விஜய்
கரூர் மாவட்டத்தில் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தோல் அல்லாத காலணி (Non-Leather Footwear) உற்பத்தி ஆலையின் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளார்.
சுமார் ரூ.1,700 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள இந்த மிகப்பெரிய தொழில் திட்டத்தின் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக சேர்த்து சுமார் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசுடன் நிறுவனத்துக்கிடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) தொடர்ச்சியாக இந்த முதலீட்டு திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது. கரூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதோடு, மாநிலத்தில் காலணி உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஈர்க்கும் முக்கிய முயற்சியாகவும் இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.





