உயர்மட்டக் குழுவை அமைக்க முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு..!
தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் நடைமுறைகள், நிர்வாக முறை, வருவாய் மேலாண்மை மற்றும் சீர்திருத்தங்களை ஆய்வு செய்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குழு, பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை ஆய்வு செய்து, தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வை அரசு அறிவித்துள்ள நிலையில், மதுபானக் கடைகளுக்கான வாடகை மற்றும் மின்கட்டணச் செலவுகளையும் இனி டாஸ்மாக் நிர்வாகமே ஏற்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் டாஸ்மாக் ஊழியர்களின் நலனை மேம்படுத்துவதோடு, நிர்வாக செயல்திறனையும் உயர்த்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றன.





