கரூரில் நாளை 10 கி.மீ. ரோடு ஷோ : முதல்வர் விஜய்க்கு 6,700 போலீசார் பாதுகாப்பு
முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை (ஜூலை 10) காலை 9.30 மணியளவில் கரூர் மாவட்டத்திற்கு புறப்பட உள்ள நிலையில், அங்கு சுமார் 10 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த ரோடு ஷோ நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கரூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, ரோடு ஷோ நடைபெறும் வழித்தடங்கள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்யும் வகையில் 6,700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும், போக்குவரத்து மாற்றங்கள், இரும்புத் தடுப்புகள் அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள், அவசர மருத்துவக் குழுக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கரூரில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.





