பா.ஜ.க தயவுடன் ஆட்சியமைக்க தி.மு.க-அ.தி.மு.க முயற்சி: நிர்மல்குமார்
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க தயவுடன் தி.மு.க, அ.தி.மு.க. இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தன. தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டு சதியை சகிக்க முடியாமல் கூட்டணி கட்சிகள் வெளியேறி உள்ளன.
குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். பிற கட்சிகளில் இருந்து யாராவது வெளியேறினால் அதற்கும் த.வெ.க.விற்கும் எந்த தொடர்பும் இல்லை. எந்த கட்சியில் இணைவது எந்த அரசியல் இயக்கத்தில் இணைந்து செயல்படுவது என்பது அவரவர் முடிவு. தமிழ்நாட்டில் இனி எப்போதும் கூட்டணி ஆட்சி தான் என்பது உறுதியாகி உள்ளது என்றார்.





