விமலா சஸ்பெண்ட் விவகாரம்: உயர்நீதிமன்ற இடைக்காலத் தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் விமலாவின் பணியிடை நீக்கத்துக்கு எதிராக கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு தாக்கல் செய்து, இடைக்காலத் தடையை ரத்து செய்யக் கோரி மனு அளித்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.





