--- --:--:-- --

ஜூலை 10, 11ஆம் தேதிகளில் கரூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

01

முதலமைச்சர் விஜய் வருகிற 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கரூர் செல்கிறார். கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்கிறார்.
கரூர் அடுத்த வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தது, தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது.

 

இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் மற்றும் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.பின்னர் கரூர் துயர வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான 3 பேர் கொண்ட சிறப்புக் கண்காணிப்புக் குழு விசாரித்து வருகிறது.

 

 

கரூர் துயரம் தொடர்பாக அங்கு பணியில் இருந்த காவல் துறையினர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள், தவெகவினர் மற்றும் பொது மக்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அண்மையில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியை கைப்பற்றி முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.

 

இந்த நிலையில் அவர் கரூர் செல்லவிருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி, முதலமைச்சர் விஜய் ஜூலை 10, 11ஆம் தேதிகளில் கரூர் செல்கிறார். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கும் முதலமைச்சர், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon