--- --:--:-- --

திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக..!

01

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக அறிவித்திருக்கிறது. மேலும், சீர்காழி மதிமுக எம்எல்ஏ செந்தில் செல்வன் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதிமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

இதில் திமுக கூட்டணியில் இருந்து விலகுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், கூட்டத்தில் சீர்காழி மதிமுக எம்எல்ஏ செந்தில் செல்வன் கலந்து கொள்ளவில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சீர்காழி மற்றும் கடையநல்லூர் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மதிமுக வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பின் தவெக ஆதரவு நிலைப்பாட்டை மதிமுக எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கு சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வன் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

மேலும், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்ற நிலைப்பாட்டில் செந்தில் செல்வன் உறுதி இருப்பதாகவும், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகினால் திமுகவில் இணைய அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் 9 ஆண்டுகள் கூட்டணி முறிந்துள்ளது.

 

 

மேலும் பொதுக்குழு தீர்மானத்தில் அதிமுக உடன் திமுக கூட்டணி சேர இருந்ததாக விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக உடன் திமுக கூட்டணி அமைக்க முயன்றது ஊரறிந்த உண்மை என்று பொதுக்குழு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழுவுக்கு துரை வைகோ வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon