பெண் குழந்தை விற்பனை..!
சேலம் சந்தனக்காடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் – கவிதா தம்பதியின் பெண் குழந்தை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை, இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் நான்காவதாக பிறந்த பெண் குழந்தையை 7 நாட்களில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு விற்றதாக தகவல். குழந்தை மீட்கப்பட்ட நிலையில், பின்னணியில் புரோக்கர்கள் இருக்கிறார்களா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.





