25 பேருடன் சென்னையில் இருந்து திருச்சி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
விழுப்புரம் அருகே ஹஜ் பயணம் முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பியவர்கள் பயணம் செய்த டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 8 குழந்தைகள் உட்பட 25 பேருடன் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த வேன், விழுப்புரம் புறவழிச்சாலையில் டயர் வெடித்ததால் கட்டுப்பாடை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





