--- --:--:-- --

உதயநிதியை தொடர்ந்து விஜய் மீது திமுக ஐடி விங் கடும் விமர்சனம்..!

3

ட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. சட்டசபையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதில் உரை கொடுத்தார். அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், டாஸ்மாக்கில் நடைபெற்ற ஊழல் குறித்து பேசிய போது டாஸ்மாக் கட்சி நிதி என்று பேசியதும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதை தொடர்ந்து சபாநாயகர் அவர்களுக்கு முதல்வர் பேசி முடித்த உடன் எதிர்கட்சியினருக்கு பேச வாய்ப்பு வழங்குகிறோம் என்றார்.

 

திமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையிலும் முதலமைச்சர் விஜய் தனது பேச்சுக்கு நடுவில் குட்டி ஸ்டோரி ஒன்றை எடுத்துரைத்தார். அப்போது ஒரு வயதான ஒருவர் வெயிலின் தாக்கம் காரணமாக நெற்றியில் கை வைத்து கொண்டு எதையோ தேடி கொண்டிருந்தார். அதை பார்த்த சிறுவன் ஒருவன் என்ன தேடிக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்டான்? அதற்கு அவர் எங்க உங்க அப்பாவைக் காணோம் என்று கேட்டார். எதிர்கட்சிகள் போன்று நானும் இதுப்போன்று சம்பந்தம் இல்லாத கதைகளை சொல்ல முடியும் என்று சொல்லி முடித்தார்.

 

இதற்கிடையே முதலமைச்சருக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ” முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் – பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு – விவசாயிகள் பிரச்சினை – மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு – வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை. எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.

 

குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆகவே, நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் நடந்து கொள்ள வேண்டும்.” என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.

 

 

தற்போது திமுக தொழில்நுட்ப பிரிவும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. அதில் “சட்டமன்றம் என்பது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் விவாதிக்கும் மாண்புமிகுந்த இடம். அங்கே மிக மலிவாக, சட்டமன்றத்தின் கண்ணியத்தையே குழிதோண்டிப் புதைத்திருகிறார் இந்த ‘இன்ஸ்டா அரசன்’!. எதிர்க்கட்சிகளை நக்கல் செய்கிறேன் பேர்வழி என அடுத்தவர் அப்பாவைத் தேடும் C.M சார், நாங்க நேரடியாகவே உங்களுக்கும் உங்க Virtual Abusersக்கும் புரியும் மொழியிலேயே கேட்கிறோம்.

 

 

அவர்களை ஏன் இப்படி நடுத்தெருவில் கைவிட்டீர்கள்? உங்கள் சொந்தப் பிள்ளைகளின் நண்பர்கள் இன்று, “உங்க அப்பா எங்கடா?” என்று கேட்டால், அந்தப் பிள்ளைகள் என்ன பதில் சொல்வார்கள் என உங்களுக்கு என்றாவது உறைத்திருக்கிறதா? உங்களது சொந்த மனைவியே, “என் கணவன் இன்னொரு நடிகையோடு தொடர்பில் இருக்கிறார்” என்று கூறி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்கும் அளவுக்குக் கேவலமான நிலையில் உங்களது தனிமனித வாழ்க்கை இருக்கிறதே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

 

இப்படிப்பட்ட அசிங்கமான பின்னணியை வைத்துக் கொண்டு, எந்த முகத்தோடு சட்டமன்றத்தில் நின்று அடுத்தவர்கள் குடும்பத்தைப் பற்றிக் குட்டிக்கதை சொல்கிறீர்கள்? மேடைக்கு மேடை ‘தனிமனித ஒழுக்கம்’ என்று ஊருக்கு உபதேசம் செய்யும் ‘சோஃபா மாடல்’ முதலமைச்சரே, முதலில் உங்கறது சொந்தக் குடும்பத்தின் வண்டவாளங்களைச் சரிசெய்துவிட்டு, அப்புறம் சட்டமன்றத்தில் வந்து பேசுங்கள்!” என்று கடுமையா விமர்சித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon