நாடு முழுவதும் இன்று நடைபெறும் நீட் மறுதேர்வு..!
நாடு முழுவதும் இன்று நடைபெறும் நீட் மறுதேர்வை சுமார் 22 லட்சத்து 79 ஆயிரம் மாணவர் தேர்வு எழுதுகின்றனர். எத்தனை மணிக்குள் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும், என்னென்ன ஆவணங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்பன குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.எம்பிபிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர ஆண்டுதோறும் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் நடைபெறும் மறுதேர்வை 22 லட்சத்து 79 ஆயிரம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.
அதன்படி தமிழ்நாட்டில் 31 நகரங்களில் உள்ள 307 தேர்வு மையங்களில் நடைபெறும் நீட் மறுதேர்வை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 489 மாணவர்கள் எழுதவுள்ளனர். இந்த முறை, குளறுபடிகளை தவிர்க்க மதிப்பிட்டாளர், மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்டோர் இணைய சேவை இல்லாத ரகசிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கேள்வித் தாள் தயாரிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், ராணுவ விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றில் பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள் அனுப்பப்பட்டன.
இந்நிலையில், இன்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான விரிவான வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5:15 வரை தேர்வு நடைபெறும் நிலையில், காலை 11 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்லலாம். மேலும் பிற்பகல் 1.30 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அஞ்சல் அட்டை அளவில் புகைப்படம் ஒட்டி கையெழுத்திட்ட ஹால் டிக்கெட் எடுத்துச் செல்வது கட்டாயம் எனவும், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அடையாள ஆவணமாக ஆதார், பான், பாஸ்போர்ட், வாக்களர் அட்டை, ஒட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களுக்குள் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒளிபுகும் வகையிலான, அதாவது டிரான்ஸ்பரண்ட் தண்ணீர் பாட்டிலை மட்டும் எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அடையாள ஆவணமாக ஆதார், பான், பாஸ்போர்ட், வாக்களர் அட்டை, ஒட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்குள் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒளிபுகும் வகையிலான, அதாவது டிரான்ஸ்பரண்ட் தண்ணீர் பாட்டிலை மட்டும் எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




