--- --:--:-- --

பாமக கூட்டணியால் தான் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அ.தி.மு.க வென்றது – சி.வி. சண்முகம்

9

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், பாமக கூட்டணியின் ஆதரவால்தான் அதிமுக கடந்த தேர்தல்களில் பல தொகுதிகளில் வெற்றி பெற முடிந்ததாகக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியபோது, வடமாவட்டங்களில் பாமக கூட்டணியில் இருந்ததன் காரணமாகவே அதிமுக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றதாகவும், அந்த வெற்றிக்கு பாமக முக்கிய பங்காற்றியதாகவும் தெரிவித்தார்.

 

 

பாமக கூட்டணியில் இல்லாதிருந்தால் வடமாவட்டங்களில் அதிமுகவால் வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், பாமக ஆதரவு இல்லையென்றால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட தனது தொகுதியில் மிகவும் கடினமான போட்டியை சந்தித்து, தட்டுத் தடுமாறித்தான் வெற்றி பெற்றிருப்பார் என்றும் சி.வி. சண்முகம் விமர்சித்தார். அவரது இந்த கருத்து அதிமுக மற்றும் பாமக வட்டாரங்களில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon