பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார் – ஸ்டாலினை விமர்சித்த த.வெ.க
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், த.வெ.க-வை விமர்சித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்து த.வெ.க சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளது. அதில், “தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார். எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார்.
இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார். பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை. எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது.
விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது. வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளது.





