பனையூரில் தவெக ஆலோசனைக் கூட்டம் – முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் பனையூரில் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டம், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





