--- --:--:-- --

152 மருத்துவ இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு தாரை வார்ப்பதா? – விஜய்க்கு உதயநிதி கேள்வி

02

மிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு தொடர்பாக, முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முக்கியக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தற்போது தமிழகத்தில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை, அகில இந்திய தொகுப்பிற்கு (இந்திய தொகுப்பு) சரண்டர் செய்வதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப் பணி மருத்துவர்கள் அந்த உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்குரிய இடங்களில் தடையின்றிச் சேருவதற்கு ஏதுவாக, தகுந்த சூழலையும் நடைமுறைகளையும் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அவர் முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon