--- --:--:-- --

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

9

ட்டச் சிக்கலை கருத்தில் கொண்டு, கடைசி நேரத்தில் அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெறுவது தவிர்க்கப்பட்டது. அதற்கு 2 காரணங்கள் முக்கியமானதாக கூறப்படுகின்றன. சி.வி.சண்முகம் -எஸ்.பி.வேலுமணி அணியின் எம்.எல்.ஏ.க்கள் ஏற்கவில்லை. த.வெ.க.வுக்கு ஆதரவாக சட்டசபையில் வாக்களித்தனர்.

 

கொறடா உத்தரவை மீறினால், அந்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியும். அந்த வகையில், 25 பேரையும் தகுதி நீக்கம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்து வருகிறார். அ.தி.மு.க.வினரை அமைச்சரவையில் சேர்ப்பதை த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்கி உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இரு கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் விரும்பவில்லை.

 

‘அ.தி.மு.க.வினரை அமைச்சரவையில் சேர்த்தால் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Right Menu Icon