மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களே அரசை விமர்சிக்கிறார்கள் : மாணிக்கம் தாகூர் சாடல்
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில்:”இது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான ஒரு பலமான உந்துசக்தியாக (momentum) அமையும். எங்களால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும்.
இது ஏற்கனவே ஒரு நிலையான அரசுதான்… மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த ஆட்சியில் ஸ்திரத்தன்மை இல்லை என்று தொடர்ந்து கூறிக்கொண்டேதான் இருப்பார்கள். எண்களின் அடிப்படையில் இந்த அரசு மிகவும் வலுவாக உள்ளது, மேலும் சட்டமன்றத்தில் இந்த அரசுக்கு போதுமான ஆதரவு இருக்கிறது. இது ஒரு பெரும்பான்மை அரசு, இது மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றும்…” என தெரிவித்துள்ளார்.





