--- --:--:-- --

அரசு கொறடாவாக சபரிநாதன் நியமனம்..!

3

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எம்.ஜி.ஆரின் குட் புக்கில் இடம் பெற்ற ஜே.சி.டி. பிரபாகரை சபாநாயகராக தேர்வு செய்த முதலமைச்சர் விஜய், தனது கட்சியின் முதல்முறை எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. சபரிநாதனை அரசு கொறடாவாக நியமித்துள்ளார்.

 

தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜயின் முன்னாள் கார் ஓட்டுநராகவும், உதவியாளராகவும் இருந்துவந்த ராஜேந்திரன் என்பவரின் மகனான சபரிநாதனுக்கு கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவி, தேர்தலில் விருகம்பாக்கத்தில் போட்டியிட வாய்ப்பு ஆகியவை வழங்கப்பட்டது.

விருகம்பாக்கத்தில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் வந்த சபரிநாதன் தற்போது அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சருக்கு இணையான அனைத்து சலுகைகளும் அரசு கொறடாவிற்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon