பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்..!
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகி ஆஷா போஸ்லே உயிரிழந்தார். அவருக்கு வயது 92.80 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குரலால் இந்திய சினிமாவை வசப்படுத்தியவர் பாடகி ஆஷா போஸ்லே. 92 வயதான இவர், பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி பல்வேறு ஜானர்களில் பாடி கவனம் பெற்றவர் ஆஷா போஸ்லே.
2 தேசிய விருதுகள், தாதா சாகேப் பால்கே, பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்றவர் ஆஷா போஸ்லே. இசை வரலாற்றில் அதிக பாடல்களை பாடியவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் ஆஷா போஸ்லே. ஹேராம் படத்தில் இடம்பெற்ற ‘நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி’, ‘அலைபாயுதே’ படத்தில் ‘செப்டம்பர் மாதம்’, ‘சந்திரமுகி’ படத்தில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த பாடகி ஆஷா போஸ்லே தற்போது காலமானார். அவருக்கு வயது 92. ஆஷா போஸ்லே மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.





