தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் : வேட்பு மனுத் தாக்கலுக்கான அவகாசம் இன்றுடன் நிறைவு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கலுக்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், 3,430 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்பேரில் ஆண்கள் சார்பில் 2 ஆயிரத்து 731 மனுக்களும் பெண்கள் சார்பில் 698 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவரைப் பொறுத்தவரை, வில்லிவாக்கம் தொகுதியில் ஒருவர் மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 84 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இங்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியிடும் நிலையில், சுயேச்சைகள் அதிகமானோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்கு நேர்மாறாக, மதுரை தெற்கு தொகுதியில் மிகக்குறைவாக வெறும் 3 மனுக்கள் மட்டுமே இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வேட்புமனுத்தாக்கல் செய்ய நாளை(இன்று) கடைசி நாள் என்ற நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோரும் நாளை(இன்று) வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.





