--- --:--:-- --

பாலியல் தொல்லை புகார் – மதூர் சத்யா பெங்களூருவில் கைது

5

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் நிர்வாகியாக இருந்தவர் மதூர் சத்யா. சமூக வலைதளங்களிலும் தன்னுடைய கருத்துகளால் பிரபலமடைந்த இவர், ஊடகங்களின் அரசியல் விவாத நிகழ்ச்சிகள், யூடியூப் நேர்காணல்களில் அரசியல் குறித்து பேசுவார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புகளான ஏ.ஐ.ஒய்.எஃப், ஐ.எஸ்.சி.யு.எஃப் ஆகியவற்றி இயங்கி வந்தார். சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தின்போது, இவருடைய கருத்துகள் கவனம் பெற்றன.

 

இந்நிலையில், மதூர் சத்யா பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் இ-மெயில் மூலம் தங்களது புகார்களை அனுப்பி இருக்கிறார்கள். இந்த புகார்கள் மீது ஆலோசனை நடத்திய நிர்வாகிகள் அவரை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்தனர். அத்துடன் பதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக காவல்துறை சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க கோரி போலீசில் புகார் கடிதத்தையும் அளித்து இருந்தனர்.

 

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏ.ஐ.ஒய்.எஃப், ஐ.எஸ்.சி.யு.எஃப் அமைப்புகளில் இருந்து மதூர் சத்யா நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும், மதூர் சத்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென் சென்னை மாவட்டம் சார்பில் சென்னை பெருநகர மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மதூர் சத்யா பெங்களூருவில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை மாலை பெங்களூருவில் சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட அவர், விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

 

முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே சிவா வெளியிட்டு இருந்த பத்திரிகை செய்தியில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏ.ஐ.ஒய்.எஃப், ஐ.எஸ்.சி.யு.எஃப் அமைப்புகளில் இருந்து மதூர் சத்யா நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதூர் சத்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென் சென்னை மாவட்டம் சார்பில் சென்னை பெருநகர மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாதிக்கப்பட்ட பெண் கடந்த மார்ச் 13 ஆம் தேதி மாலை இ-மெயில் மூலம் மதூர் சத்யா மீது பாலியல் புகார் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதம் தொடர்பாக எங்கள் கட்சியின், தென் சென்னை மாவட்ட குழு கடந்த மார்ச் 14 ஆம் தேதி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளான ஏ.ஐ.ஒய்.எஃப், ஐ.எஸ்.சி.யு.எஃப் அமைப்புகளில் மதூர் சத்யா வகித்து வந்த பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார்.

 

மேலும் பதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும் காவல்துறை சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க கோரி காவல்துறையில் புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மதூர் சத்யாவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏ.ஐ.ஒய்.எஃப், ஐ.எஸ்.சி.யு.எஃப் தோழர்கள் அனைவரும் அமைப்பு ரீதியாக எந்த தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது” என்று தெரிவித்து இருந்தார்.

Right Menu Icon