விஜய் பங்கேற்கும் இஃப்தார் நோன்பு..!
த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்கும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று நடைபெறும் உள்ளரங்க நிகழ்ச்சியில் 1000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அழைப்பிதழ் பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் பங்கேற்க அனுமதி இல்லை என தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கூறியுள்ளார்.





