இன்றைய தங்கம் விலை நிலவரம்..!
இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மார்ச் 1ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம் விலை கடந்த 3-4 நாட்களாக குறைந்து வருகிறது. வார தொடக்க நாளான நேற்று (மார்ச் 16) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,710க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 60 குறைந்து ஒரு கிராம் ரூ.14,650க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.12,330க்கும், சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு சவரன் ரூ.98,640க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.280க்கும், ஒரு கிலோ ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






